1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Updated : திங்கள், 17 ஏப்ரல் 2023 (09:45 IST)

வேற லெவல் சம்பவம் loading… மிரட்டலான மேக்கிங் வீடியோவை வெளியிட்ட தங்கலான் படக்குழு!

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் 'தங்கலான்’ என்ற திரைப்படத்தில் விக்ரம் மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் ஷுட்டிங் மதுரை மற்றும் ஆந்திராவின் சில பகுதிகளில் முதலில் நடந்தது. அதன் பின்னர் கே ஜி எஃப்-ல் ஷூட்டிங் நடந்தது.

இந்த படம் மூன்று மொழிகளில் வெளியாகும் என தெரிகிறது. மேலும் பல மொழிகளில் டப் ஆகி ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளார் தயாரிப்பாளர். இந்நிலையில் இன்று நடிகர் விக்ரம்மின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்த படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. காடு மற்றும் கேஜிஎஃப் ஆகிய பகுதிகளில் செட்கள் அமைத்து ரிஸ்க் எடுத்து பல காட்சிகளை படக்குழுவினர் படமாக்கியுள்ளனர். இந்த மேக்கிங் வீடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு எகிறவைத்துள்ளது.