சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகும் விமானம்… ரிலீஸ் தேதி அறிவிப்பு
இயக்குனர் சமுத்திரக்கனி இப்போது பிஸியான நடிகராகி விட்டார். ஆனாலும் இடையில் படங்களை இயக்கியும் வருகிறார். அந்த வகையில் ஜி 5 ஓடிடி தளத்துக்காக அவர் இயக்கிய படம்தான் விநோயத சித்தம். இந்த படம் அக்டோபர் 13 ஆம் தேதி வெளியாகி பரவலாக பாராட்டுகளைப் பெற்றது. இதையடுத்து இப்போது இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளார் சமுத்திரக்கனி. தமிழில அவர் நடித்த வேடத்தில் பவன் கல்யாணும், தம்பி ராமையா நடித்த வேடத்தில் முன்னணி நடிகர் ஒருவரும் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த படத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இப்போது சமுத்திரக்கனி, நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள விமானம் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்த படத்தை சிவபிரசாத் யானலா இயக்க, மாஸ்டர் துருவன், மீரா ஜாஸ்மின், ராஜேந்திரன், அனுசுயா பரத்வாஜ், ராகுல் ராமகிருஷ்ணா, தன்ராஜ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.
ஜூன் மாதம் 9 ஆம் தேதி ரிலீஸாக உள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.