1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cm
Last Modified: வியாழன், 4 ஜனவரி 2018 (12:06 IST)

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் பாடல் ரிலீஸ் தாமதம் ஏன்?

இன்று வெளியாக இருந்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் 5வது பாடலை அப்லோட் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.


விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். அத்துடன், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், செந்தில், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் இன்று ரிலீஸாவதாக இருந்தது. ஆனால், மகாராஷ்டிராவில் பந்த் நடப்பதால், திட்டமிட்டபடி பாடல்களை அப்லோட் செய்ய முடியவில்லை என்று தெரிவித்துள்ள விக்னேஷ் சிவன், அது வரும்வரை ஏற்கெனவே ரிலீஸான பாடல்களைக் கேட்கும்படி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.