புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 9 மார்ச் 2019 (16:03 IST)

தளபதி 63: அப்டேட் கேட்ட ரசிகர்களுக்கு புகைப்படத்தை வெளியிட்டு குஷிப்படுத்திய விஜய் 63 பிரபலம்.!

சர்கார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய் "தளபதி 63"  படத்தில் நடித்து வருகிறார்.



தெறி ,மெர்சல் போன்ற மெகா ஹிட் வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில் 3 வது முறையாக விஜய் நடிக்கிறார். இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிக்க இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.  வில்லு படத்தைத் தொடர்ந்து விஜய்க்கு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஜோடியாக இப்படத்தில் நடிக்கிறார். 
 
கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகவுள்ள இப்படத்தின் பாடல்வரிகளை பாடலாசிரியர் விவேக் தான் எழுதுகிறார்.  இவர் ஏற்கனவே விஜய்யின் மெர்சல் படத்தில் இடப்பெற்ற ஆளப்போறான் தமிழன் பாடல்களை எழுதி மிகப்பெரிய ஹிட் கொடுத்தார். 
 
ஆதலால் தளபதி 63 படத்திற்கும் இவரே பாடல்களை எழுத்தவுள்ளதால்  விஜய் ரசிகர்கள் அடிக்கடி அப்டேட் கேட்டுகொண்டே இருக்கின்றனர்.  ஆனால், விவேக்கோ’ இவ்வளவு சீக்கிரம் தளபதி பட அப்டேட்டை என்னால்  கொடுக்க முடியாது , ஆனால் உங்களுக்கு ஏமாற்றத்தை தராமல் மகிழ்ச்சியூட்ட  தளபதியுடன் ஷூட்டிங் சமயத்தில் எடுத்த புகைப்படத்தை பகிர்கிறேன்.” என கூறி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.