1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 8 மார்ச் 2019 (22:37 IST)

தளபதி 64: விஜய், சிறுத்தை சிவா, சூப்பர்குட் பிலிம்ஸ்?

தளபதி விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் 'விஜய் 63' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது
 
இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படமான 'தளபதி64' படத்தை சிறுத்தை சிவா இயக்குவார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. மேலும் இந்த படத்தை விஜய் நடித்த ஒருசில வெற்றிப்படங்களை தயாரித்த சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
 
இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் தொடங்கவிருப்பதாகவும், வரும் 2020ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது
 
மேலும் சிவா ஸ்டைலில் இந்த படம் செண்டிமெண்ட் கலந்த ஆக்சன் படம் என்றும் விஜய் ரசிகர்களுக்கு இந்த படம் செம விருந்தாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.