செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (13:53 IST)

தளபதி 63 :- தெறிக்கவிடும் இன்ட்ரோ சாங்..!

தளபதி 63 படத்தில் இன்ட்ரோ சாங் பற்றின லேட்டஸ்ட் தகவல் சற்றுமுன் வெளியாகி விஜய் ரசிகர்களை குஷிபடுத்தியுள்ளது. 


 
அட்லீ இயக்கத்தில் தளபதி 63 படத்தில்  மூன்றாவது முறையாக இணைந்துள்ளார் நடிகர் விஜய். இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிகர் யோகி பாபு, விவேக் ஆகியோரும், வில்லன் கதாபாத்திரத்தில் ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி ஆகியோரும் நடிக்கின்றனர்.
 
கால்பந்தாட்டத்தை  மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் கதிர் இடம்பெற்றுள்ளார். மேலும் இந்தப் படத்தில் விஜய் கதாபாத்திரத்தின் பெயர் சி.மைக்கேல் என்ற  பெயரை சுருக்கி (சி.எம்) என அழைக்கப்படுவதாக நேற்று தகவல் கிடைத்தது . படத்தின் சில பகுதிகள் அமெரிக்காவில் எடுக்கப்படும் எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகளை வந்தது. 
 
கடந்த மாதம் 21-ம் தேதி சென்னை பின்னி மில்லில் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்  தற்போது சென்னை பின்னி மில்லில் செட் அமைக்கப்பட்டு தளபதி 63 படத்திற்கான இன்ட்ரோ பாடல் காட்சி எடுக்கப்பட்டு வருவதாக நெருங்கிய சினிமா வட்டாரங்கள் மூலம் செய்தி வெளியாகியது. 
 
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் கைவண்ணத்தில் உருவான இந்த பாடல் லோக்கல் மற்றும் அர்பன் சாயலில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.