வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (06:18 IST)

விஜய்சேதுபதியின் 'துக்ளக்' படம் குறித்த அறிவிப்பு

விஜய்சேதுபதி நடித்த படத்தை இயக்கியவர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீண்டும் மீண்டும் அவருடன் பணிபுரிந்து வருவதை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம்.

அந்த வகையில் விஜய்சேதுபதியின் '96' படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்த  '7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ' நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு 'துக்ளக்' என்ற டைட்டிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாகவும், இந்த படத்தில் முன்னணி நாயகி ஒருவர் நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்தை இயக்கவுள்ள டெல்லிபிரசாத் தீனதயாள் தெரிவித்துள்ளார். இவர் இயக்கும் முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே விஜய்சேதுபதி, 'மாமனிதன்', 'லாபம்', 'சயிர நரசிம்மரெட்டி', 'சூப்பர் டீலக்ஸ்', 'கடைசி விவசாயி', சிந்துபாத், போன்ற படங்களில் விஜய்சேதுபதி நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே