ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (11:40 IST)

திரிஷாவை விடாமல் சைட் அடித்த விஜய் சேதுபதி: ’96’ 100வது நாளில் கலகல!!

கடந்த ஆண்டின் மிகச்சிறந்த படங்களின் பட்டியல் ஒன்றை தயாரித்தால் அதில் முதல் இடம் பிடிக்கும் படமாக '96' திரைப்படம் இருக்கும். 
 
காதல் படமாக இருந்தாலும் அனைத்து தரப்பினர்களையும் இந்த படம் கவர்ந்தது. குறிப்பாக ராம், ஜானு கேரக்டர்களை இன்னும் சில ஆண்டுகளுக்கு ரசிகர்கள் மறக்க மாட்டார்கள்
 
இந்த நிலையில் நேற்று சென்னையில் '96' படத்தின் 100வது நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் கேடயம் கொடுத்து கெளரவிக்கப்பட்டது. இதில் இயக்குனர் சேரன், பார்த்திபன், திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் பங்குபெற்றனர். இதில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்றது 
 
விஜய் சேதுபதி, பார்த்திபனிடம் சார் நீங்க நடுநடுவுல த்ரிஷாவ பாக்குறீங்க, ஆனா நான் வந்ததிலிருந்தே திரிஷாவ தான் பாத்துட்டு இருக்கேன். இவ்வளவு அழகான ஒரு பொண்ண பாக்கலன்னா படைச்சவனுக்கு பண்ற துரோகம் சார் அது என கூறினார். இவரின் இந்த பேச்சை கேட்டதும் அரங்கமே அதிர்ந்தது. தொடர்ந்து பேசிய இயக்குனர் சேரன் 96 படத்தை பார்த்து தாம் பொறாமைபட்டதாகவும், 96 படத்தை எந்த படத்தாலும் பீட் பண்ண முடியாது எனவும் கூறினார்.