ரஜினியை ஓவர்டேக் செய்த விஜய்! தளபதி 63 வியாபாரம் இத்தனை கோடியா!

Last Updated: திங்கள், 29 ஏப்ரல் 2019 (18:49 IST)
தமிழ் சினிமாவில் ரசிகர்களின் முடிசூடா மன்னனாக திகழும் தளபதி விஜய் அட்லி கூட்டணியில்  தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக  'தளபதி 63' படத்திற்காக இணைந்துள்ளனர்.


 
விஜய்க்கு ஜோடியாக  நயன்தாரா நடிக்கும்  இப்படத்தில்  கதிர், யோகிபாபு உள்ளிட்டோர்  நடிக்கிறார்கள். மேலும், இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பல்வேறு இடங்களில் தற்போது நடைபெற்று வருகிறது. 
 
விளையாட்டை மையப்படுத்தி உருவாகிவரும் இந்த படத்தில் நடிகர் விஜய் ஒரு காபந்து பயிற்சியாளராக நடிக்கிறார் என்றும், மேலும், இந்த படம் பெண்கள் கால்பந்து போட்டியை பற்றிய கதையாக இருக்கும் என ஏற்கனவே பல தகவல்கள் வெளியாகின. தற்போது படப்பிடிப்பு வேகமெடுத்து விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நேரத்தில் இப்போதே வியாபாரம் சூடுபிடித்துவிட்டது. 
 
பொதுவாக விஜய் படங்கள் என்றாலே வெளியாவதற்கு முன்பாகவே வெளியீட்டு உரிமம் பல கோடிகளுக்கு விற்று தீர்ந்து விடும் . இறுதியாக வெளியான சர்கார் படம் கூட ஓவர் சீஸ் வியாபாரத்தில் பல கோடிக்கு விற்கப்பட்டு வசூலில் வேட்டையாடியது. 
 
இந்த நிலையில் தற்போது படத்தின் உரிமையை பெற பல்வேறு நிறுவனம் முந்தியடித்துக்கொண்டு போட்டி போட்டு வருகிறது. அந்த வகையில் இப்படம்  உலகம் முழுவதும் ரூ 200 கோடி வரை வியாபாரம் செய்யும் என சில பிரபல திரைப்பிரபலங்கள் யூகித்து கூறியுள்ளனர். இதன் மூலம் ஓவர்சீஸ் விளம்பரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியை மிஞ்சியுள்ளார் தளபதி விஜய். 


இதில் மேலும் படிக்கவும் :