ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 29 ஏப்ரல் 2019 (10:59 IST)

குட்பாய் சொல்ல காத்திருந்த விஜய்... உதாசினப்படுத்திய நடிகை

பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் விஜய்யுடன் இருந்த நடித்த விளம்பர பட சூட்டிங்கை பற்றி மனம்திறந்து நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். 
 
பல ஆண்டுகளுக்கு முன்னர் கத்ரீனா கைஃப் மற்றும் விஜய் கோக் விளம்பரத்தில் நடித்திருந்தனர். அந்த விளம்பரத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தது. இது குறித்து சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார் கத்ரீனா கைப். 
 
அவர் கூறியதாவது, கோக் விளம்பர சூட்டிங்கிற்காக ஊட்டிக்கு சென்றிருந்தேன். சூட்டிங்கின்போது தரையில் அமர்ந்திருந்தோம். நான் அப்போது யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்தேன். அந்நேரம் என் முன்பு இரண்டு பாதங்கள் தெரிந்தது.
நான் யாரோ நிற்கிறார்கள் என்று, நான் நிமிர்ந்து கூட பார்க்காமல் போனில் பேசிக் கொண்டிருந்தேன். நேரம் கடந்த பின்னரும் அந்த பாதங்கள் அங்கேயே இருந்தது, அதனால் யார் என்று நிமிர்ந்து பார்த்தேன். அவர் என்னுடன் விளம்பரத்தில் நடித்த சக நடிகர், எனக்கு பாய் செல்ல காத்திருந்தார். 
 
அதன் பின்னர்தன அந்த நடிகர் விஜய் என்றும், அவர் பிரபலமான தென் இந்திய நடிகர் என்பதையும் நான் தெரிந்துக்கொண்டேன். விஜய் ரொம்ப நல்ல மனிதர், பந்தா இல்லாமல் அனைவரிடமும் நன்றாகவே பழகுவார் என கத்ரீனா கைப் விஜய் பற்றி பேசினார்.