1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 12 அக்டோபர் 2021 (17:02 IST)

தளபதி 67 பற்றி உலவும் வதந்தி!

நடிகர் விஜய் நடிக்க உள்ள தளபதி 67 படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் குறித்து உலவும் வதந்திகளுக்கு விடை கிடைத்துள்ளது.

இந்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியான இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் இரண்டிலும் சேர்த்து 200 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தளபதி விஜய்யின் 65வது படமான ‘பீஸ்ட்’ படத்தை நெல்சன் இயக்கி வருகிறார் என்பதும், 66வது படத்தை வம்சி இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தை தில்ராஜ் தயாரிக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தளபதி விஜய்யின் 67வது படத்தை மீண்டும் மாஸ்டர் கூட்டணி இணைய உள்ளது. தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகவும் லலித்குமார் தயாரிக்க உள்ளதாகவும் சமூகவலைதளங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால் இதில் உண்மை இல்லை என சொல்லப்படுகிறது.

ஏனென்றால் விஜய் தான் ஒரு படத்தில் பாதி நடித்த முடித்த பின்னரே அடுத்த படத்துக்கான கதையைக் கேட்க ஆரம்பிப்பாராம். அதனால் தளபதி 66 படத்தின் ஷூட்டிங் தொடங்கிய பின்னரே அடுத்த படத்துக்கான கதையைக் கேட்பாராம்.