புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 12 அக்டோபர் 2021 (11:34 IST)

மூன்றாவது முறையாக விஜய்க்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்!

நடிகர் விஜய் அடுத்து நடிக்க உள்ள படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66வது திரைப்படம் குறித்த தகவல்கள் கடந்த சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருந்தன என்பதும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் அவரது படம் உருவாக இருப்பதாக கூறப்பட்டது. இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்னர் வெளியானது.

விஜய்யுடன் தில் ராஜூ மற்றும் வம்சி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள படக்குழுவினர் தளபதி 66 திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது படத்தின் வேலைகளில் ஈடுபட்டுள்ள வம்சி  வில்லனாக நடிக்க தெலுங்கு நடிகர் நானியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.

இந்நிலையில் படத்தில் கதாநாயகியாக நடிக்க இருப்பது கீர்த்தி சுரேஷ்தான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாம். ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் பைரவா மற்றும் சர்கார் படங்களில் விஜய்யோடு நடித்திருக்கிறார். இதையடுத்து மூன்றாம் முறையாக விஜய்யோடு நடிக்க உள்ளார்.