1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 2 பிப்ரவரி 2023 (13:33 IST)

அன்பு இதயங்களே.... சிகிச்சைக்கு பின் விஜய் ஆண்டனி போட்ட பதிவு!

தமிழ் சினிமாவில் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி 2005ம் ஆண்டிலிருந்து பல்வேறு படங்களுக்கு இடையமைத்திருக்கிறார். அத்துடன் நான், சலீம் , பிச்சைக்காரன், சைத்தான், எமன் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். 
 
இதில் பிச்சைக்காரன் திரைப்படம் அவரது கெரியரின் சிறந்த படமாக அமைந்தது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் மலேசியாவில் உள்ள ஒரு தீவில் நடைபெற்றது. அப்போது  ‘வாட்டர் ஸ்கூட்டியில்’ கதநாயகியுடன் செல்வது போன்ற காட்சியில் விஜய் ஆண்டனி ஓட்டிய வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு படகின் மீது மோதி, கடலில் கவிழ்ந்துள்ளது. 
 
இதனால் முகம் சேதமடைந்து பலத்த காயத்துடன் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது சிகிச்சை பின்னர், அன்பு இதயங்களே...நான் 90% குணம் அடைந்து விட்டேன். உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்துவிட்டன. என்னமோ தெரியவில்லை, நான் இப்போது முன்பைவிட அதிக சந்தோஷத்தை உங்களால் உணருகிறேன். வரும் ஏப்ரல் வெளியாகும் பிச்சைக்காரன் 2 பட வேலைகளை இன்று முதல் தொடங்குகிறேன். அன்புக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.