வெள்ளி, 26 டிசம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 2 பிப்ரவரி 2023 (14:04 IST)

டிடியின் மறுமணம் குறித்து கூறிய அக்கா பிரியதர்ஷினி - யார் அந்த மாப்பிள்ளை ?

டிடியின் மறுமணம் குறித்து கூறிய அக்கா பிரியதர்ஷினி - யார் அந்த மாப்பிள்ளை ?
விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஹீரோயின் ரேஞ்சுக்கு உச்சத்தை தொட்டவர் டிடி. அந்த நிகழ்ச்சிகளில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து தற்போது ஒருசில படங்களிலும் நடித்து வருகிறார். 
 
டிடி திருமணம் ஆகி விவகாரத்து ஆனவர் என எல்லோருக்கும் தெரியும். ஹீரோயின் போன்று அழகு பதுமையாக இருக்கும் அவர் இன்னும் வேறு திருமணம் செய்யத்தை பற்றி பரவலாக கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது. 
 
அப்படித்தான் டிடி கேரளாவை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்யப்போவதாக  செய்திகள் வெளியானது. இதுகுறித்து கூறியுள்ள அவரது அக்கா பிரியதர்ஷினி, எனக்கு தெரியவில்லை. டிடியிடம் கேட்டால் கூட அப்படியா? யார் அது என கூலாக கேட்பார் என கூறியுள்ளார்.