வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 7 ஏப்ரல் 2021 (21:20 IST)

ஜார்ஜியா போய் சேர்ந்த ‘தளபதி 65’ படக்குழு: காஸ்ட்யூம் டிசைனர் தகவல்

ஜார்ஜியா போய் சேர்ந்த ‘தளபதி 65’ படக்குழு: காஸ்ட்யூம் டிசைனர் தகவல்
தளபதி விஜய் நேற்று சைக்கிளில் வந்து வாக்களித்த நிகழ்வு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நேற்று இரவு விஜய் உள்பட தளபதி 65 படக்குழுவினர் ஜார்ஜியா சென்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
சென்னை விமான நிலையத்தில் விஜய் உள்பட தளபதி 65 படக்குழுவினர் இருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி தளபதி 65 படக்குழுவினர் அனைவரும் ஜார்ஜியாவில் சேர்ந்துள்ளனர் 
 
இதனை விஜய்யின் காஸ்ட்யூம் டிசைனராக பல்லவி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உறுதி செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
நாளை முதல் ஜார்ஜியாவில் தளபதி 65 படப்பிடிப்பு தொடங்கும் என்றும் ஒரு சில வாரங்கள் அங்கு படக்குழுவினர் தங்கியிருந்து படப்பிடிப்பு நடத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது