1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 5 ஏப்ரல் 2021 (19:23 IST)

மிதாலிராஜ் பயோபிக்: டாப்ஸி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

மிதாலிராஜ் பயோபிக்: டாப்ஸி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!
இந்திய கிரிக்கெட் மகளிர் அணியின் முன்னணி வீராங்கனையான மிதாலிராஜ் பயோபிக் படத்தில் பிரபல நடிகை டாப்ஸி நடிக்க உள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது
 
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் என்பதும் இவர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 7 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீராங்கனை என்பதும் தெரிந்ததே. கடந்த 20 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் இவர் சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆயிரம் கடந்த 2வது வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இவரது பயோபிக் திரைப்படம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பதும் இந்த படத்தில் டாப்ஸி நடிக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது 
 
சபாஷ் மிது என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் மிதாலிராஜ் வேடத்தில் டாப்ஸி நடிக்கிறார் என்பதும் இதற்காக இவர் கடுமையான கிரிக்கெட் பயிற்சி கடந்த சில நாட்களாக ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை வயாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது