வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (07:56 IST)

மித்தாலி ராஜின் பயோபிக் ‘சபாஷ் மிது’ – படப்பிடிப்பு தொடங்கியது!

டாப்ஸி நடிப்பில் உருவாகும் இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் பயோபிக் படப்பிடிப்பு நேற்று தொடங்கியுள்ளது.

இந்திய சினிமாவில் விளையாட்டில் சாதித்தவர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் ஆகியவர்களின் பயோபிக்குகள் இப்போது அதிகமாக உருவாகின்றன. அந்தவகையில் நடிகை டாப்ஸி தற்போது  இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை மித்தாலி ராஜ் வாழ்க்கை வரலாறு படமான சம்பாது மித்து என்ற படத்தில் நடிக்க சம்மதித்தார்.

அந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியுள்ளது. முன்னணி நடிகையான டாப்ஸி நடிப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.