திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 5 ஏப்ரல் 2021 (15:11 IST)

அக்‌ஷய்குமார் படப்பிடிப்பில் 45 பேருக்கு கொரோனா! – படப்பிடிப்பு நிறுத்தம்!

பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமாருக்கு கொரோனா உறுதியான நிலையில் அவருடைய படப்பிடிப்பில் கலந்து கொண்ட 45 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தற்போது பாலிவுட் நடிகர்கள் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அபிஷே ஷர்மா இயக்கத்தில் “ராம்சேது” என்ற படத்தில் நடித்து வந்த அக்‌ஷய்குமாருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பில் கலந்து கொண்டு சக நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட 100 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதில் 45 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் படப்பிடிப்பும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.