1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 3 டிசம்பர் 2019 (21:10 IST)

தளபதி 64 படத்தின் 4 நாள் ஷெட்யூல் குறித்த தகவல்

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இருபது நாட்களும், டெல்லியில் சுமார் ஒரு மாதமும் நடைபெற்றன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பில் கர்நாடக மாநிலத்திலுள்ள சிறைச்சாலை ஒன்றில் 30 நாட்கள் நடத்த திட்டமிட்டு அதற்கான அனுமதியும் பெறப்பட்டுள்ளது. இந்த படப்பிடிப்பு டிசம்பர் இரண்டாவது வாரம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் சென்னையில் நான்கு நாட்கள் ஷெட்யூலி, ‘தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருவதாகவும், இந்த சின்ன ஷெட்யூலில் விஜய் சம்பந்தப்பட்ட முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது 
 
இன்று முதல் 7ம் தேதி வரை நடைபெறும் இந்த படப்பிடிப்பு நடைபெறும் இடம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாகவும், படப்பிடிப்பு நடக்கும் இடம் தெரிந்தால் ரசிகர்கள் விஜய்யை பார்க்க குவிந்து விடுவார்கள் என்பதால் இந்தப் படப்பிடிப்பு நடக்கும் இடம் படக்குழுவினர்களை தவிர யாருக்கும் தெரியாது என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ரசிகர்கள் மோப்பம் பிடித்து படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது
 
விஜய், மாளவிகா மேனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிலோமினா ராஜ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது