திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 3 டிசம்பர் 2019 (21:04 IST)

சிவகார்த்திகேயன் அதிரடியால் முடிவை மாற்றி கொண்ட விஜய்!

சிவகார்த்திகேயனின் அதிரடி அறிவிப்பால் விஜய் பட குழுவினர் தங்களது முடிவை மாற்ற வேண்டிய நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
 
சிவகார்த்திகேயன் நடிப்பில், நேசன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாக உள்ள ’டாக்டர்’ என்ற திரைப்படத்தில் அறிவிப்பு நேற்று வெளியானது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் பிரியங்கா மோகனன் என்பவர் நாயகியாகவும், வினய் வில்லனாகவும், யோகி பாபு காமெடி நடிகராகவும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்தது
 
இந்த நிலையில் விஜய் நடித்துவரும் ’தளபதி 64’ படத்தில் நீட் தேர்வு அனிதா சம்பந்தப்பட்ட காட்சிகள் இருப்பதால் அந்த படத்திற்கு ’டாக்டர்’ என்று டைட்டில் வைக்க படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். இதற்காக ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் உருவாக்கவும் டிசைனரிடம் ஆர்டர் கொடுத்து விட்டதாகவும் செய்திகள் கசிந்தது.
 
இந்த நிலையில் திடீரென சிவகார்த்திகேயன் தனது அடுத்த படத்திற்கு ’டாக்டர்’ என்று டைட்டில் வைத்துள்ளதால் தற்போது ‘விஜய்64’ படக்குழுவினர் டைட்டிலை மாற்ற வேண்டிய நிலையில் உள்ளனர். தற்போது ’சம்பவம்’ உட்பட ஒரு சில டைட்டில்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் இன்னும் ஓரிரு நாளில் இந்த டைட்டில் முடிவு செய்யப்பட்டு அதன் பின் மீண்டும் புதிதாக டிசைன் செய்யப்படும் என்றும் தளபதி 64 படக்குழுவினர்களிடமிருந்து செய்திகள் கசிந்துள்ளது 
 
ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த ’ஹீரோ’ படத்தின் டைட்டிலும் பஞ்சாயத்தில் உள்ளது என்பதும் இதே டைட்டிலில் விஜய் தேவர்கொண்டா ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது