செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : செவ்வாய், 3 டிசம்பர் 2019 (13:44 IST)

"தளபதிக்கு லிப் லாக் கிஸ் கொடுக்கனும்" - விஜய் ரசிகர்களிடம் வாங்கி கட்டிய நடிகை!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக இருந்து வருகிறார். இவருடன் சமந்தா , த்ரிஷா, காஜல் அகர்வால் , தமன்னா என அத்தனை முன்னணி நடிகைகளும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். மேலும் வளர்ந்து வரும் பல நடிகைகளின் விஜய்யுடன் ஒரு படம் நடித்துவிட்டால்  போதும் என்கிற அளவிற்கு கனவு காணுவார்கள். 
 
அந்தவகையில் தற்போது துரை இயக்கத்தில் உருவாகி வரும் "இருட்டு" என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் சாக்ஷி பிரபல யூடியூப் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அப்போது படத்தில் ஏற்பட்ட அனுபவங்களை குறித்து பேசிய அவரிடம், நீங்கள் படத்தில் லிப் லாக் கொடுக்கவேண்டும் என்றால் இவர்களில் யாருக்கு கொடுப்பீர்கள் என கூறி சல்மான் கான் , தளபதி விஜய் , ரன்பீர் கபூர் என மூன்று ஆப்ஷன் கொடுத்தார். 
 
அதற்கு சட்டென பதிலளித்த நடிகை சாக்ஷி நடிகை விஜய்க்கு கொடுப்பேன் என கூறி அவர் மிகவும் கியூடாக இருக்கிறார் எனக்கு அவரை பிடிக்கும் என காரணத்தையும் கூறினார்.  அவரின் அந்த பேட்டியை கண்ட விஜய் ரசிகர்கள் ஓஹோ...உங்களுக்கு அப்படியெல்லாம் வேற ஆசை இருக்கோ என நக்கலாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.