வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 27 டிசம்பர் 2019 (18:50 IST)

தளபதி 64 செட்டில் விஜய் சேதுபதி – கேக் வெட்டி கொண்டாட்டம் !

விஜய்யின் அடுத்த படமான தளப்தி 64 படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் விஜய் சேதுபதி கலந்துகொண்டுள்ளார்.

பிகில் படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். அதன் படப்பிடிப்பு தற்போது கர்நாடகா மாநிலத்தில் உள்ள சிமோகாவில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இதுவரை அவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவில்லை.

இந்நிலையில் முதல் முறையாகப் படப்பிடிப்புத் தளத்துக்கு வந்த அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு ஆரவாரம் செய்தனர். கூட்டத்தில் ஒருவரின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி அவருக்கு ஊட்டினார் விஜய் சேதுபதி. கர்நாடகாவில் நடக்கும் படப்பிடிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் சிறை சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப் பட இருக்கின்றன.