வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 26 டிசம்பர் 2019 (21:23 IST)

அட்லீ-ஷாருக்கான் படம் டிராப்! காரணம் யார் தெரியுமா?

விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய பிகில் திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தையடுத்து அட்லி, ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியது. இந்த படத்திற்கான திரைக்கதையை அட்லி, வெளிநாட்டில் எழுதி முடித்து விட்டதாகவும் அந்த திரைக்கதையை படித்துப் பார்த்த ஷாருக்கான் சில மாற்றங்கள் செய்ததாகவும் கூறப்பட்டது. எனவே அட்லீ-ஷாருக்கான் படம் கிட்டத்தட்ட உறுதி என்றே கூறப்பட்டது 
 
இந்த நிலையில் தற்போது திடீரென அட்லீ-ஷாருக்கான் படம் டிராப்பாகி விட்டதாக கூறப்படுகிறது. அட்லி இயக்கிய முந்தைய படங்களின் தயாரிப்பாளர்களிடம் ஷாருக்கான் தரப்பினர் அட்லி குறித்து விசாரித்ததாகவும் அவர்கள் யாருமே அட்லீ குறித்து பாசிட்டிவான கருத்தை கூறாததால் ஷாருக்கான் அட்லீ படத்தை தவிர்த்து விட்டதாகவும் கூறப்படுகிறது\
 
இதனை அடுத்து ஜூனியர் பாலையா படத்தை அட்லி இயக்குவதாக இருந்ததாகவும் அவர்கள் தரப்பிலும் விசாரித்து பார்த்ததில் அதில் ஒருவர் கூட அட்லி குறித்து நல்ல விதமாக கூறாததால், அந்தப் படமும் டிராப் ஆகி விட்டதாக கூறப்படுகிறது. எனவே அட்லியின் அடுத்த படம் எப்போது தொடங்கும் என்ற கேள்விக்குறியே தற்போதைய நிலையாக உள்ளது