செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Modified: வியாழன், 26 டிசம்பர் 2019 (21:49 IST)

தேர்தல் அறிவித்தவுடன் தி.மு.க வின் முதல்வேலை ! நீதிமன்றத்திற்கு செல்வது தான் !எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு

100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் கொடுப்பது மத்திய அரசு, என்றும் ஆனால் அங்கு அதை பாராளுமன்றத்தில் கேட்காமல் நன்கு தூங்கி விட்டு வரும் கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி இங்கு வந்து போராடுவது எப்படி என்று ! ? கரூர் அருகே தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆகிய இரு தேதிகளில் நடைபெறும் நிலையில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அ.தி.மு.க வேட்பாளர்களையும், அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து அனல்பறக்கும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார். 
 
இந்நிலையில் இன்றுடன் (25-12-19) முதல்கட்ட தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில். கரூர் அடுத்த ஆண்டாங்கோயில் மேல்பாகம், ஆத்தூர், ஆத்தூர் பூலாம்பாளையம், மருத்துவ நகர், வேப்பம்பாளையம், மொச்சக்கொட்டாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் திரு.வி.க மற்றும் அ.தி.மு.க வேட்பாளர்கள் மட்டுமில்லாது கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
 
- அப்போது, அவர் கூறியதாவது :
 
தேர்தல் அறிவித்தவுடனே தி.மு.க வின் முதல்வேலையே நீதிமன்றத்திற்கு செல்வது தான், ஆனால், 4 வருடங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்த வில்லை என்று ஒரு பெயரை அதிமுக கட்சிக்கு ஏற்படுத்தி வருகின்றதாகவும் அவர் தெரிவித்தார். 
 
தற்போது கூட நீதிமன்றத்திற்கு சென்று பொங்கல் தொகையினை கொடுக்க தடை விதித்துள்ளது. அதற்கும் தி.மு.க தான் காரணம், ஆகையால் மக்கள் வாக்களித்த பிறகு ஒரு வாரத்திற்குள் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் ரூ 1000 வழங்க உள்ளார்கள். ஆகவே, அனைவருக்கும் பல ஏழை, எளிய திட்டங்கள் கிடைத்திடும் வகையில் அனைத்து தரப்பினரும் பலனளிக்கும் வகையில் ஏராளமான திட்டங்களை தீட்டி வந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் ஏராளமான நலத்திட்டங்களை வழங்கி வரும் ஒரே முதல்வர் நமது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்றார். ஆகவே கரூர் மாவட்டத்தில் நூறுநாள் வேலைதிட்டத்தின் கீழ் பணிபுரிபவர்களுக்கு மத்திய அரசு தான் சம்பளம் கொடுக்க வேண்டுமென்றும், ஆனால், தற்போது தமிழக அரசு ஒரு குழுவினை மத்திய அரசிடம் அனுப்பி ஒரிரு நாள்களில் அந்த பணம் வந்துவிடும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், 100 நாள் வேலை திட்டத்தினையும், அதன் செயல்களையும் கவனிப்பது மத்திய அரசு, ஆனால் இங்குள்ள காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியோ அங்கே வாய்திறக்காமல், நன்கு தூங்கி விட்டு, அப்படியே அமைதியாக வந்து கரூரில் போராட்டம் நடத்துவதையும் சுட்டிக்காட்டினார். 
 
மேலும், ஆர்.கே.நகர் முதல் அரவக்குறிச்சி வரை டோக்கன் கொடுப்பவர்கள் இங்கே வருவார்கள் ஆர்.கே.நகரில் ரூ 10 ஆயிரம் தருவதாக கூறி டோக்கன் கொடுத்தார்கள், அரவக்குறிச்சி தொகுதியில் ரூ 2 ஆயிரம் நோட்டினை ஜெராக்ஸ் எடுத்து அதனை டோக்கனாக கொடுத்தார்கள் என்றதோடு, அவர்கள் வருவார்கள் என்று முன்னாள் அமைச்சரும், தற்போதைய தி.மு.க மாவட்ட பொறுப்பாளருமான செந்தில் பாலாஜியை சுட்டிக்காட்டியதோடு, மக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என்றும், ஏற்கனவே அவர் தனது சொந்த பணத்தில் 25 ஆயிரம் நபர்களுக்கு வீட்டுமனைப்பட்டா கொடுப்பதாக கூறி மக்களிடம் வாக்குகள் கேட்டு தற்போது ஜெயித்தவுடன் ஏமாற்றி விட்டார். 
 
ஆகவே, தற்போது 25 ஆயிரம் நபர்களுக்கு லட்சியம், 10 ஆயிரம் நபர்களுக்கு நிச்சயம் என்று கதைவிட்டு வருகின்றார். லட்சியம் நிச்சயம் என்று சொல்வதற்கு செந்தில் பாலாஜி என்ன அறிஞர் அண்ணாவா ? என்றும் அவர் ஆவேசமாக பேசினார்.