வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 23 மார்ச் 2021 (13:32 IST)

ஜெயாவை குனிந்து வணங்கும் அமைச்சர்கள்! தமிழில் ஒரு கட்.. இந்தியில் ஒரு கட்! – தலைவி ட்ரெய்லர்!

இயக்குனர் விஜய் இயக்கத்தில் வெளியாகவுள்ள தலைவி படத்தின் ட்ரெய்லர் இந்தி மற்றும் தமிழில் வெவ்வேறு விதமாக வெளியாகியுள்ளது.

இயக்குனர் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடித்துள்ள படம் தலைவி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் எம்ஜிஆராக அரவிந்த்சாமி நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி, நாசர், மதுபாலா ஆகியோர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ள நிலையில் இந்தி மற்றும் தமிழில் வெவ்வேறு வகையான ட்ரெய்லர்கள் வெளியாகியுள்ளன. தமிழில் அரசியல் வசனங்கள், காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்துள்ள நிலையில், இந்தியில் காதல் காட்சிகள் வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

அதுபோல இந்தியில் ட்ரெய்லர் இறுதியில் அமைச்சர்கள் அனைவரும் ஜெயா முன்பு குனிந்து வணங்குவது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த காட்சி தமிழ் ட்ரெய்லரில் இடம்பெறவில்லை. தமிழ் ட்ரெய்லரில் அமைச்சர்களோடு நடந்து வருவது போல காட்சி உள்ளது. இந்நிலையில் திரைப்படம் வெளியாகும்போது தமிழ் மற்றும் இந்தியில் பல்வேறு காட்சிகள் மாற்றப்பட்டிருக்கலாம் என பேசிக் கொள்ளப்படுகிறது.