வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (15:45 IST)

இரண்டு ஓடிடி தளங்களில் வெளியாகும் தலைவி!

தலைவி திரைப்படம் திரையரங்க ரிலிஸுக்குப் பிறகு இரண்டு ஓடிடி தளங்களில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

திரையரங்குகள் திறந்தால்தான் ‘தலைவி’ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்றும் இந்த திரைப்படம் கண்டிப்பாக ஓடிடியில் ரிலீஸ் ஆகாது என்றும் திட்டவட்டமாக நடிகை கங்கனா ரணவத் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக ‘தலைவி’ திரைப்படத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ‘தலைவி’ திரைப்படம் ஓடிடியில் ரிலீசாக போவதாக ஒரு சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது. ஆனால் அதை படக்குழு முற்றிலும் மறுத்தது.

இந்நிலையில் தலைவி படம் திரையரங்கில் வெளியான பின்னர் இரண்டு முன்னணி ஓடிடி தளங்களில் வெளியாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.