ஓடிடியில் வெளியாகிறது சிம்பு தேவனின் “கசடதபற” – வெங்கட் பிரபு வெளியிட்ட அப்டேட்!
சிம்பு தேவன் இயக்கியுள்ள ஆந்தாலஜி திரைப்படமான கசடதபற படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வைரலாகியுள்ளது.
சிம்பு தேவன் இயக்கத்தில் ஆறு குறும்படங்களின் தொகுப்பாய் உருவாகியுள்ளது கசடதபற. ஆறு குறும்படங்களையும் சிம்பு தேவனே எழுதி இயக்கியுள்ள நிலையில் வெங்கட் பிரபு தயாரித்துள்ளார். ஆறு குறும்படங்களுக்கும் சாம் சி எஸ், ப்ரேம்ஜி அமரன், சந்தோஷ் நாராயணன், யுவன் சங்கர் ராஜா, ஷான் ரோல்டன், ஜிப்ரான் ஆகியோர் தனித்தனியாக இசையமைத்துள்ளனர்.
இந்த ஆறு குறும்படங்களிலும் ஹரிஷ் கல்யாண், சுந்தீப் கிஷன், ப்ரியா பவானி சங்கர், ப்ரேம்ஜி, ரெஜினா கஸாண்ட்ரா, அரவிந்த ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியான நிலையில் இந்த படம் சோனி லைவ் ஓடிடியில் ஆகஸ்டு 27ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.