வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 22 ஆகஸ்ட் 2021 (11:13 IST)

3 மணிக்கு டிவியில், 12 மணிக்கு ஓடிடியில்..! – ஐஸ்வர்யா ராஜேஷின் “பூமிகா” Sneak peak!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள “பூமிகா” திரைப்படம் இன்று பிரபல சேனலில் ஒளிபரப்பாவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க ரதீந்திரன் பிரசாத் இயக்கியுள்ள திரைப்படம் “பூமிகா”. விது, பாவெல் நவகீதன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்திற்கு ப்ரித்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார். தற்போது கொரோனா காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாமல் உள்ள நிலையில் இந்த படத்தை ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

அதற்கு முன்னதாக விஜய் டிவியில் இந்த படம் ஒளிபரப்பாக உள்ளது. இன்றி பிற்பகல் 3 மணிக்கு விஜய் டிவியிலும், இரவு 12 மணிக்கு நெட்ப்ளிக்ஸிலும் இந்த படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் 4 நிமிட ஸ்னீக்பீக் காட்சி வெளியாகியுள்ளது.