பட்ஜெட்டை விட அதிகமான தொகைக்கு டிஜிட்டல் ரைட்ஸ் – இப்பவே லாபம் பார்த்த தலைவி!

Last Modified வெள்ளி, 16 அக்டோபர் 2020 (11:24 IST)

கங்கனா நடிப்பில் உருவாகியுள்ள தலைவி படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் மட்டும் 45 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தலைவி என்ற பெயரில் தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். கொரோனா லாக்டவுன் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் தடைபட்டிருந்த நிலையில் இப்போது மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் மட்டும் 45 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த படத்தின் பட்ஜெட்டே 40 கோடி ரூபாய்தானாம். இதனால் இந்த படம் இனி திரையரங்கங்கள் மூலம் சம்பாதிக்கும் பணம் அனைத்தும் லாபம் என்றே சொல்லப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :