திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 17 ஜூன் 2021 (19:21 IST)

தளபதி விஜய் பட புதிய அப்டேட் !

தமிழ் சினிமாவின்  முன்னணி நடிகர் விஜய். இவர்,  நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தற்போது  விஜய்65 என்ற பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு சினிமா முன்னணி நடிகை பூஜா  ஹெக்டே நடித்து வருகிறார். இதில் காமெடி கதாப்பாத்திரத்தில் யோகிபாபு உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், வரும் ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் 47 வது பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கான அவரது ரசிகர்கள் ஒருவாரத்திற்கு முன்பிருந்து சமூக வலைதளத்தைத் தெறிக்க விட்டு வருகின்றனர்.

குறிப்பாக விஜய்யின் பிறந்தநாளின்போது, விஜய்க்கான Common Dp ஐ ரசிகர்கள் தயாரித்து வருகின்றனர். இந்தக் common dp ஐ பாடலாசிரியர் விவேக் வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய்65 பட புதிய அப்டேட் வெளியாகும் எனில் இது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி உண்டாக்கி நிச்சயம் சமூகவலைதளங்களில் ஒரு சாதனை நிகழ்த்தப்படும் என தெரிகிறது.