வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 3 ஜூன் 2021 (18:00 IST)

விஜய் மகன் சஞ்சய் வீடியோ ரிலீஸ்...இணையதளத்தில் வைரல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய்.. இவர் இதுவரை 64 படங்களில் நடித்துள்ளார். அடுத்து இவர் திலீப் குமார் இயக்கத்தில் விஜய்65 படத்தில் நடித்துவருகிறார்.        இவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

இந்நிலையில், விஜய் தன் மகன் சஞ்சய்-ஐ போக்கிரி படத்தில் முதன் முதலாக அறிமுகம் செய்தார்.

அதன்பிறகு படிப்பதில் ஆர்வமுடம் இருந்த சஞ்சய் சினிமா சம்பந்தமாக கனடாவில் படித்து வந்த நிலையில் கொரொனா தொற்றுக் காரணமாக சென்னை வீட்டிற்கு வந்தார்.

விரைவில் இவர் நடிகராகவோ, இயக்குநராகவோ அறிமுகம் ஆகலாமென தகவல் வெளியானது. விஜய் ரசிகர்கள் இதனால் ஆர்வமுடம் உள்ளனர்.

இந்நிலையில், சஞ்சய் தனது  டுவிட்டர் பக்கத்தில் 14 நொடி வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதை விஜய் ரசிகர்கள்  சமூகவலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.