சூர்யாவின் என்.ஜி.கே பட வசூல் இவ்வளவா ? ரசிகர்கள் ’செம ஹேப்பி ‘

ngk
Last Modified சனி, 1 ஜூன் 2019 (20:59 IST)
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து இன்று திரைக்கு வந்துள்ள  படம் என்.ஜி.கே. இதில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நாயகிகளாக நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
திரைப்படம் வெளியாவதை கொண்டாடும் வகையில் சூர்யாவின் ரசிகர்கள் 215 அடி உயரமான ஒரு கட் அவுட்டை திருத்தணி அருகே திருவள்ளூர்- சென்னை நெடுஞ்சாலை பகுதியில் அமைத்தார்கள். இதற்காக சுமார் 7 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 
 
இதுவரை எந்த நடிகருக்கும் இவ்வளவு உயரமான கட் அவுட் வைத்ததில்லை. இந்த கட் அவுட் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வைரலானது.
 
ngk
இந்நிலையில் தற்போது சூர்யாவின் என் ஜி கே படம் சென்னையில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படங்களில் 10 வது இடத்தைப் பிடித்துள்ளது.
 
நேற்று வெளியான இப்படம், சென்னையில்  முதல்நாளில் 1 கோடியே 3 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் சூர்யாவின் ரசிகர்கள் இந்த மகிழ்ச்சியான செய்தியைக் கொண்டாடி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :