1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 4 ஜனவரி 2019 (09:45 IST)

தல அஜித்தின் 'விஸ்வாசம்' ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?

தல அஜித்தின் 'விஸ்வாசம்' திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத பிரமாண்டத்துடன் வெளிவரவுள்ளது. இந்த படத்திற்கு படக்குழுவினர் செய்யும் புரமோஷனை விட பல மடங்கு தல ரசிகர்கள் செய்து வருவதால் இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் குடும்ப செண்டிமெண்டுகள் அதிகம் உள்ள 'விஸ்வாசம்' திரைப்படம் சென்சாரில் 'யூ' சான்றிதழ் பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் 152 நிமிடங்கள் அதாவது இரண்டு மணி 32 நிமிடங்கள் என்ற தகவல் வெளிவந்துள்ளது. சுமார் இரண்டரை மணி நேரம் என்ற சரியான ரன்னிங் டைமை இந்த படம் கொண்டுள்ளது இந்த படத்தின் பாசிட்டிவ்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

'விஸ்வாசம்' படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் படக்குழுவினர்களின் அதிகாரபூர்வமான தகவல் இல்லை என்றாலும் மலேசியாவில் 'விஸ்வாசம்' படத்தை திரையிடும் ஒரு திரையரங்கு தனது இணையதளத்தில் இந்த தகவலை பதிவு செய்துள்ளதால் இந்த தகவல் உண்மை என்றே கருதப்படுகிறது.