ஒரே விநியோகிஸ்தரின் கையில் சிக்கிய 'பேட்ட'-விஸ்வாசம்'
ஜனவரி 10ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'பேட்ட' திரைப்படமும், தல அஜித்தின் 'விஸ்வாசம்' திரைப்படமும் வெளியாகவுள்ள நிலையில் இந்த இரண்டு படங்களின் வியாபாரமும் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.
இந்த நிலையில் விஸ்வாசம்' திரைப்படத்தின் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளின் ரிலீஸ் உரிமையை செவன்த் சென்ஸ் சினிமாட்டிஸ் என்ற விநியோகிஸ்த நிறுவனம் பெற்று அந்நாடுகளில் உள்ள முக்கிய திரையரங்குகளை ஒப்பந்தம் செய்து வைத்துள்ளது.
இந்த நிலையில் இதே செவன்த் சென்ஸ் சினிமாட்டிஸ் நிறுவனம் தான் 'பேட்ட' திரைப்படத்தின் ரஷ்யா, உக்ரைன் நாடுகளின் ரிலீஸ் உரிமையையும் பெற்றுள்ளது. இதனால் ஏற்கனவே 'விஸ்வாசம்' படத்திற்கு புக் செய்திருந்த ஒருசில திரையரங்குகளை 'பேட்ட' படத்திற்கு கைமாற்றி வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
இருப்பினும் இரண்டு படங்களையும் ரஷ்யா, உக்ரைன் நாடுகளில் பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய இந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.