வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Modified: புதன், 2 ஜனவரி 2019 (18:57 IST)

'பேட்ட', விஸ்வாசம் படங்களை அடுத்து பொங்கலுக்கு வெளியாகும் இன்னொரு தமிழ்ப்படம்

வரும் பொங்கல் விருந்தாக ரஜினியின் 'பேட்ட' திரைப்படமும், அஜித்தின் 'விஸ்வாசம்' திரைப்படமும் வரும் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது என்பது தெரிந்ததே. இந்த இரண்டு பெரிய படங்கள் வெளியாவதால் சிம்புவின் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' உள்பட ஒருசில படங்கள் பொங்கல் ரிலீசில் இருந்து பின்வாங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் பாராட்டுக்களை பெற்ற நடிகர் கதிர் நடித்த நீண்ட நாள் கிடப்பில் இருந்த 'சிகை' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது. ஆனால் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை என்பதும், ஜீடிவியின் அதிகாரபூர்வ செயலியில் இந்த படம் பொங்கல் அன்று வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த தகவலை தனது டுவிட்டரில் தெரிவித்துள்ள நடிகர் கதிர், 'நாங்களும் பொங்கலுக்கு வர்றோம்ல' என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே பிரகாஷ்ராஜ் நடிப்பில் இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கிய 'சில சமயங்களில்' என்ற திரைப்படம் நேரடியாக நெட்பிளிக்ஸ்ஸில் வெளியான நிலையில் தற்போது கதிரின் 'சிகை' திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக செயலியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது