திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 24 ஆகஸ்ட் 2019 (13:20 IST)

வெளியானது "தல 60" படத்தின் அஜித் கெட்டப் - வைரலாகும் மாஸ் லுக்!

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித் ஹெச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் மீண்டும் இணைந்து தனது 60-வது படத்தில் நடிக்கவிருக்கிறார்.  அஜித் பைக் ரேஸராக நடிக்கவுள்ள இப்படம் அவரின் கடந்த கால வாழக்கையை சுவாரஸ்யமாக சொல்லும் விதத்தில் உருவாக உள்ளது. AK 60 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. 


 
இந்தப் படத்தின் பணிகளில் கவனம் செலுத்து வரும் படக்குழுவினர் வருகிற செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் படப்பிடிப்பை துவங்கவுள்ளனர். இதில் அஜித்துடன் இணைந்து போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் தமிழில் அறிமுகமாக இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி படத்தின் மீது எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது. 

இந்நிலையில் தற்போது அஜித் தனது 60-வது படத்திற்காக தனது கெட்டப்பை முற்றிலுமாக மாற்றி பைக்  ரேஸருக்கு ஏற்றவாறு கட்டான உடல் தோற்றத்தை கொண்டுள்ளார். கூடவே கருப்பு நிற ஹேரில் இளமையான தோற்றத்தில் ஸ்டைலாக இருக்கும் அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை கண்ட அஜித்தின் ரசிகர்கள் தல 60 படத்தின் லுக் என்று கூறி ஷேர் செய்து வருகின்றனர்.