புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By
Last Modified: சனி, 24 ஆகஸ்ட் 2019 (12:49 IST)

ஒரே நாளில் 640ரூபாய் உயர்ந்த தங்கம்: பொதுமக்கள் அதிர்ச்சி

தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கும் நிலையில், இன்றைய நிலவரப்படி ஒரே நாளில் 640 ரூபாய் உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக பங்குசந்தையில் தொடர்ந்து சரிவுகள் ஏற்பட்டு வருவதால் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த வாரம் தங்கம் விலை உயர்ந்து 29 ஆயிரத்தை தொட்டது. இந்நிலையில் இன்று ஒரு பவுனுக்கு 640 ரூபாய் விலை உயர்ந்து 29440 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகளவில் நிகழும் பொருளாதார மந்தநிலையால் பல நிறுவனங்கள் முன்னெச்சரிக்கையாக தங்கத்தில் முதலீடு செய்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலை இப்படியே நீடித்தால் தங்கத்தின் விலை ஏற்றம் அடுத்த வாரத்தில் 30 ஆயிரத்தை தொடும் என கூறப்படுகிறது.