1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 24 ஆகஸ்ட் 2019 (11:14 IST)

எது திராவிட அரசியல்? டிவிட்டரில் க்ளாஸ் எடுத்த எச்.ராஜா!

எது திராவிட அரசியல் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா திமுகவை சீண்டும் வகையில் சில டிவிட்டுக்களை பதிவிட்டுள்ளார். 
 
சாராய ஃபேக்டரியை நடத்திக்கொண்டே டாஸ்மாக்கை மூடச் சொல்வதும், 
 
இந்தி சொல்லிக்கொடுக்கும் பள்ளிகள் நடத்திக்கொண்டே இந்தியை எதிர்ப்பதும்,
 
கர்நாடகாவிடமிருந்து தண்ணீர் தரவில்லையென்றால் தமிழ்நாடு தனி நாடு ஆகுமெனச் சொல்லிக்கொண்டே... ஜோலார்பேட்டை தண்ணீர் சென்னைக்கு தரவிட மாட்டோமென்கிறதும்,
 
தன்னுடைய பிள்ளைகளை பல லட்சங்களை கட்டி பள்ளிகளில் படிக்க வைத்துக்கொண்டே... அதே கல்வியை கிராமத்து ஏழைகளுக்கு இலவசமாக தரும் நவோதயாவை எதிர்ப்பதும்,
இந்துமத நம்பிக்கைகளை கேவலப்படுத்தி பேசிக்கொண்டே... கிறிஸ்துவ, இஸ்லாமிய மதகூட்டங்களில் பங்கேற்பதும்,
 
லட்சக்கணக்கான கோடிகளை சொத்து சேர்த்து வைத்துக்கொண்டு, ஊழலை நடமாட விடமாட்டோமென்பதும்தான் திராவிட அரசியல்! என பதிவிட்டுள்ளார். 
 
இதில் குறிப்பிடப்பட்டுள்ள பல திமுகவை சீண்டும் விதமாக இருந்தாலும், இணையவாசிகள் பலர் இந்த திராவிட அரசியல் அதிமுகவிற்கும் பொருந்தும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.