வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 30 ஜனவரி 2019 (13:24 IST)

"தல 59" ஓரங்கட்டு "தல 60" அப்டேட்ஸ் வந்தாச்சு! - ஹீரோயின் யாருன்னு பாருங்க..!

தல 60 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்ஸ் இதோ..! 



 
‘விஸ்வாசம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித்  எச்.வினோத் இயக்கத்தில் பிங்க் ரீமேக் படத்தில் நடிக்கிறார். ஸ்ரீ தேவியின் கனவை நிறைவேற்றி போனிகபூரின் தயாரிப்பில் தல நடித்து வரும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 
 
அண்மையில் இப்படத்தில் பணிபுரியும் கலைஞர் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம், அஜித்துடன் இணைந்து ஸ்ரீநாத் மற்றும் பலவுட் நடிகை வித்யா பாலன் நடிக்கவுள்ளதாக தெரிவித்தனர். 
 
தல 59 படத்தை தொடர்ந்து மீண்டும் போனி கபூர் தயாரிப்பிலே  அஜித் நடிக்கவுள்ளார். அந்த படத்தையும் எச்.வினோத் குமார் தான் இயக்கவிருக்கிறார். இது நமக்கு தெரிந்த ஒன்று தான். 

தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால், "தல 60" படத்தை 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இப்படத்தில் நடிகை ராகுல் ப்ரீத் சிங் முதன்முதலாக அஜித்திற்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக  கிசுகிசுக்கபடுகிறது. 


 
ஏற்கனவே "தீரன் அதிகாரம் ஒன்று" படத்தில் நடிகை ராகுல் ப்ரீத் சிங் வினோத் குமார் இயக்கத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.