சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் – மாறன் சகோதர்களுக்கு உத்தரவு !

Last Updated: புதன், 30 ஜனவரி 2019 (13:58 IST)
சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு விலக்கு அளிக்க முடியாதென சென்னை உயர்நீதிமன்றம் மாறன் சகோதரர்கள் கொடுத்த மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.

சட்டவிரோதமாக பிஎஸ்என்எல் தொலைப்பேசி இணைப்புகளை தங்கள் சன் டி.வி. அலுவலகத்தில் முறைகேடாக பயன்படுத்திய வழக்கில் நேரில்  ஆஜராக வேண்டும் என சிபிஐ நீதிமன்றம் கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் மற்றும் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்ட சிபிஐ நீதிமன்றத்தின் உத்தரவௌ ரத்து செய்யக்கோரியும் மாறன் சகோதரர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த சென்னை நீதிமன்ற நீதிபதிகள் குற்றச்சாட்ட்டுப் பதிவு செய்ய போதுமான முகாந்திரம் இருப்பதாக ஏற்கனவே உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் விளக்கியுள்ளன. அதனால் மனுதாரர்கள் எந்த விளக்கமானாலும் அதை சிபிஐ நீதிமன்ரத்திலேயே சொல்ல வேண்டும். எனவே சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து  விலக்களிக்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதனால் இன்று இருவரும் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியக் கட்டாயத்தில் உள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :