வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 30 ஜனவரி 2019 (12:48 IST)

பழனிச்சாமியா? பமனிச்சாமியா? கன்பியூசில் நடந்த களோபரம்!!

சுவற்றில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் பெயர் பமனிச்சாமி என தவறாக எழுதப்பட்ட போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
கட்சி மற்றும் தலைவர்களின் பெயர்கள் ஆங்காங்கே சுவற்றில் எழுதப்படுவது வாடிக்கையாக உள்ளது. அப்படி சுவற்றில் எழுதப்படும் தலைவர்களின் பெயர்களில் பிழைகள் இருப்பது சகஜகமாகிவிட்டது. சமீபத்தில் கூட துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் பெயரை பன்னீ செல்வம் என யாரோ எழுதிவிட்டனர். 
 
இந்நிலையில் சுவற்றில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் பெயர் பமனிச்சாமி என தவறாக எழுதப்பட்ட போட்டோ தற்பொழுது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இது எந்த ஊரில் எழுதப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை. தற்பொழுது இந்த போட்டோவானது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் யாரப்பா இதை எழுதியது அவரை  பார்க்கனும் போலிருக்கிறது என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.