1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

வெகு விரைவில் தொப்பையை குறைக்கும் அற்புத வழிகள் சில...!

இஞ்சி சாற்றினைக் காலையில் அதுவும் வெறும் வயிற்றில் குடிப்பது மிக நல்லது. நமது தமிழ் சித்த மருத்துவத்தில் குறிப்பிடுவது போல “காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் ஒரு மண்டலம் தின்றால் கோலை ஊன்றிக் குறுகி நடப்பவன் கோலை வீசி  நிமிர்ந்து நடப்பானே” இஞ்சியின் பலன் மிக அதிகம்.
இஞ்சி சாற்றில் தேன் கலந்து இளம் சூட்டில் காலையில் வெறும் வயிற்றில் தினமும் குடித்து வந்தால் தொப்பை குறைந்து விடும்.
 
இஞ்சியை சாறு எடுத்து அவற்றில் அரைப் பகுதி எலுமிச்சை பழச்சாற்றை விட்டு அப்படியே வைத்திட வேண்டும். 5 நிமிடங்களி கழித்துப்  பார்த்தால் இஞ்சி சாற்றின் கலங்கிய பகுதி அடியில் தங்கிவிடும். பிறகு கலக்கமில்லாத அந்தச் சாற்றை வாரம் இரண்டு முறைப் பருகி வரத்  தொப்பை குறைவதைக் காணலாம்.
 
கிரீன் தேநீரில் உள்ள ஆண்டியாக்ஸிடண்டுகள் கெட்ட கொழுப்பினைக் கரைத்து தொப்பையைக் குறைக்க உதவுகிறது. மேலும் உடலுக்குப் புத்துணர்ச்சியையும் கொடுக்கிறது.
சிறுதானியங்கள் நம்க்குக் கிடைத்தம் மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். தினமும் காலையிலோ அல்லது மதியமோ சிறுதானியங்களில் ஏதாவது ஒன்றை உண்டு வந்தால் அவற்றில் உள்ள நார்ச்சத்து கொழுப்பைக் குறைத்து தொப்பை வளர்வதைத் தடுக்கும். முக்கியமாகக் குதிரைவாலி  மற்றும் கேழ்வரகு போன்றவை பசி ஏற்படுவதைக் கட்டுபடுத்தி மிக அதிகமான உணவு உட்செல்வதைத் தடுக்கிறது.
 
சரியான நேரத்தில் தூங்கி காலையில் விரைவில் எழுந்தால் நமது உடலில் வளர்சிதைமாற்றம் பாதிக்கப்படாமல் மென்மேலும் வளர்ந்து தொப்பை போடுவதைத் தடுக்கிறது.
 
காலை உணவு மதிய உணவைப் போல் அதிகமாகவும், மதிய உணவு சற்றே குறைவாகவும், இரவு உணவு குறைவாகவும் இருக்க வேண்டும்.  இடப்பட்ட நேரத்தில் பசி எடுத்தால் பழங்கள் மற்றும் சத்துள்ள நிலக்கடலை, பாதாம் போன்ற கொட்டைகளை உண்ணலாம்.
 
காலையில் எழுந்தவுடன், ஒரு லிட்டர் அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இவ்வாறு செய்வது இரவு முழுவதும் வெறுமையாக இருந்த  வயிற்றில் தங்கியிருக்கும் கழிவுகளை அகற்ற ஒரு நல்ல மருந்தாக இருக்கிறது. வயிற்றின் பசியை ஆற்றாமல் வெறுமையாகப் பல  மணிநேரம் விட்டுவிட்டால் வயிற்றில் வாயுக்கள் தங்கி அதுவே தொப்பை ஏற்படுவதற்கான காரணமாகிவிடுகிறது.
 
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடற்பயிற்சி அவசியம். உங்களில் தினசரி முற்றிலும் உடல் உழைப்பாக இருந்தால் உடற்பயிற்சி  அவசியமில்லை. தானாகவெ கெட்ட கொழுப்பு வியர்வையின் மூலம் வெளியேற வாய்ப்புகள் உள்ளது.