வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 30 ஜனவரி 2019 (13:08 IST)

யாரும் தடுக்க முடியாது...அப்படித்தான் விமர்சிப்பேன் - புளூ சட்டை மாறன்

சமீபத்தில் பிரபுதேவா, நிக்கி கல்யாணி ஆகியோர் நடிப்பில் திரைக்கு வந்துள்ள படம் சார்லி சாப்பின் 2. இப்படத்தை சக்தி சிதம்பரம் இயக்கியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு இத்திரைப்படம் வெளியான போது யுடியூப் சேனலில் திரைப்பட விமர்சகராக அறியப்படும் புளூ சட்டை மாறன் என்பவர்  சார்லி சாப்ளின் 2 படத்தை நேர்மறையாக விமர்சனம் செய்ய தன்னிடம்  பணம் கேட்டு மிரட்டியதாக இயக்குநர் சக்தி சிதம்பரம்  போலீஸில் புகார் தெரிவித்தார். மேலும் ஓவ்வொரு திரைப்படம் வெளியாகும் போதும் அப்படத்தை திட்டி விமர்சிப்பதை தன் வழக்கமாக கொண்டுள்ளதாக அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் பலர் கூறிவந்தனர்.
 
இந்நிலையில் பிரபல இணையதள பத்திரிக்கைக்கு இவ்விவகாரம் குறித்து புளூசட்டை மாறன் பேட்டி அளித்துள்ளார்.
 
அதில் இப்போது தரக்குறைவான படங்களையே எடுத்து வருகிறார்கள். அதனால் தான் தரக்குறைவாக விமர்சிக்கிறேன். அப்படி படம் எடுப்பவர்கள் யாரும் கலைசேவையாற்ற இங்கு வரவில்லை. நான் விமர்சனம் செய்ய எனக்கு  கருத்து சுதந்திரம் உள்ளது. இதை யாரும் தடுக்க முடியாது. நான் தொடர்ந்து என் பணியைச் செய்வேன், எனக்கு எதிரான புகார்களை சட்ட ரதியாக எதிர்கொள்வேன் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.