திங்கள், 20 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 4 அக்டோபர் 2023 (19:42 IST)

'தலைவர் 170 'படம் பூஜையுடன் ஆரம்பம்..வைரல் புகைப்படம்

rajini 170
ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த்  நடிப்பில் த.செ .ஞானவேல் இயக்கத்தில் உருவாகும்  'ரஜினி170' படம் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.


சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில்,  ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் படம் 'ரஜினி 170'. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து,  துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்திய சினிமா ரசிகர்கள்  உற்று நோக்கத் தொடங்கியுள்ள  ரஜினியின் 'தலைவர் 170' பான் இந்தியா படம் இன்று கேரளம் மாநிலம் திருவனந்தரபுரத்தில் பூஜையுடன் தொடங்கியது.

இதில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,  மஞ்சுவாரியர், இயக்குனர்,தயாரிப்பு நிறுவன நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதுகுறித்த புகைப்படங்களை லைகா சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது. இது வைரலாகி வருகிறது.