வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 4 அக்டோபர் 2023 (12:47 IST)

அமிதாப்பின் முதல் தமிழ் படம் “தலைவர் 170”… சம்பளம் இத்தனைக் கோடியா?

ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடந்தது. இன்று முதல் ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் தொடங்குகிறது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை நேரடி தமிழ்ப் படத்தில் நடித்திடாத நடிகர் அமிதாப் பச்சன் முதல் முறையாக ரஜினிக்காக இந்த படத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. 1991 ஆம் ஆண்டு ஹம் படத்தில் கடைசியாக இணைந்து நடித்திருந்தார்கள். அதன் பிறகு 32 ஆண்டுகள் கழித்து இப்போது இந்த படத்துக்காக இருவரும் இணைந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க 20 நாட்கள் அமிதாப் பச்சன் கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாகவும், அதற்காக அவருக்கு 15 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.