1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 4 அக்டோபர் 2023 (07:34 IST)

காவேரி விவகாரம் பற்றிக் கேட்டதும் பதில் சொல்லாமல் கிளம்பிய ரஜினி!

ரஜினிகாந்த் நடிப்பில் லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் த செ ஞானவேல் இயக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. இதற்காக ரஜினிகாந்த் திருவனந்தபுரம் கிளம்பி சென்றுள்ளார். படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் செல்லும் வழியில் ரஜினிகாந்த் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “இந்த படம் மிக பிரம்மாண்டமாக உருவாக உள்ளது. ஒரு முக்கியமான பிரச்சனையை பற்றி இந்த படம் பேசும்” எனக் கூறினார்.

அப்போது காவேரி தண்ணீரை கர்நாடக அரசு தர மறுப்பது குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்ப எந்த பதிலும் சொல்லாமல் விறுவிறுவென நடந்து சென்றார். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.