தொடர்புடைய செய்திகள்
- தன்னார்வ அமைப்பின் விருதை ஏற்க மறுத்த ஐபிஎஸ் அதிகாரி ரூபா
- நாதெள்ளா சம்பத் நிறுவனம் ரூ.250 கோடி மோசடி - தொடரும் புகார்கள்
- விசாரணை ஆணையத்தில் சமர்பித்த பிரமாணப் பத்திரம் : ஓ.பி.எஸ்-க்கு ஆப்பு வைக்கும் சசிகலா
- ரஜினி, கமலுக்கு பூஜ்யம் தான் கிடைக்கும்: துணை முதல்வர் ஓபிஎஸ்
- நான் வந்துட்டேன்னு சொல்லு- தமிழில் டுவிட் செய்த சிஎஸ்கே வீரர்
எம்பிக்கள் ராஜினாமா: மத்திய அரசுக்கு குடைச்சல் கொடுக்கும் ஆந்திரா...
தெலங்கானா மாநிலம் ஆந்திரா மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட போது ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கொடுப்பதாக மத்திய அரசு தெரிவித்து இருந்தது. இதனால் தற்போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதனால் கூட்டணி கட்சியாக இருந்த தெலுங்கு தேசம் கட்சி மற்றும் பாஜகவின் இணக்கத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், மத்திய அமைச்சர்வையில் இருக்கும் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 2 அமைச்சர்கள் பதவி விலகினர்.
அதை தொடர்ந்து மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால், இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. தற்போது ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து தராத காரணத்தால் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்பிக்கள் ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளனர்.
குறைந்தது 50 எம்பிக்களின் ஆதரவு நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிரைவேற்ற தேவைப்படுகிறது. இந்த நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று மக்களவை எம்பிக்கள் மட்டும் ராஜினாமா செய்வார்கள் என ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
