சந்திரபாபு நாயுடுவிற்கு செக்: கிரண்பேடிதான் பாஜகவின் செக்மேட்...

Last Modified செவ்வாய், 27 மார்ச் 2018 (19:02 IST)
ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு தெலங்கானா உறுவானது. ஆந்திரா பிரிக்கப்பட்ட சமயத்தில் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று மத்திய அரசு வாக்குறுதி அளித்திருந்தது.
 
ஆனால், மத்திய அரசு சொன்னதை செய்யாமல் காலம் தாழ்த்தி வருவதால் அதிருப்தி அடைந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மக்களவையில் இருந்து தனது எம்பிக்களை ராஜினாமா செய்ய வைத்தார். அதன் பின்னர் பாஜகவுடனான தெலுங்கு தேச கட்சியின் கூட்டணியையும் உடைத்தார்.
 
இதன் பின்னர் வெளிப்படையாக மத்திய அரசை விமர்சித்து வந்தவர், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் கொண்டுவந்தார். நேற்று ஒய்.ஆர்.எஸ் காங்கிரஸ் கட்சி எம்பிக்களும் ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். 

 
இதனால், மத்திய அரசு சிக்கலில் சிக்கி உள்ளது. எனவே, இதற்கு ஒரு முடிவு கட்ட கிரண் பேடி ஆந்திர மாநிலத்தின் கவர்னராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ஆந்திர மற்றும் தெலங்கானாவிற்கு நரசிம்மன் கவர்னராக செயல்ப்பட்டு வருகிறார். 
 
தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவடைந்ததும் ஆந்திர மாநில கவர்னராக கிரண் பேடி நியமிக்க படலாம் என தகவல் கசிகிறது. கிரண்பேடி தற்போது புதுச்சேரியின் கவர்னராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :