ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 13 மே 2019 (12:30 IST)

"பொறக்கும் போது எல்லாரும் அம்மணமாத்தான பொறக்கணும்" "ஒத்த செருப்பு" டீசர்!

தமிழ் சினிமாவின் தரமான இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் பார்த்திபன். இவர் சிறந்த இயக்குனர் என்பதையும்  தாண்டி மிகச்சசிறந்த நடிகரும் கூட. அதுமட்டுமின்றி எதையும் வித்தியாசமான கோணத்தில் சிந்திக்கும் பார்த்திபனின் ‘ஒத்த செருப்பும்’ அவ்வாறே இருப்பதால் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.


 
தமிழ் சினிமாவில் சுகமான சுமைகள், உள்ளே வெளியே, சரிகமபதநி, புள்ளைக்குட்டிக்காரன், ஹவுஸ்புல், இவன், குடைக்குள் மழை, பச்சைக் குதிரை உள்ளிட்ட பல படங்களை தயாரித்து இயக்கி நடித்து வெற்றி  கண்ட பார்த்திபன், கோடிட்ட இடங்களை நிரப்புக படத்திற்கு பிறகு தற்போது ‘ஒத்த செருப்பு’ என்ற படத்தை தயாரித்து இயக்கி நடிக்க உள்ளார் . 
 
சமீபத்தில் ‘ஒத்த செருப்பு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோவை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டு நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது இப்படத்தின் டீசரை இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.
 
தானே இயக்கி நடிக்கும் ஒவ்வொரு படத்தையும் வித்தியாசமான கோணத்தில் சிந்திக்கும் பார்த்திபனின் ‘ஒத்த செருப்பும்’ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.  52 விநாடிகள் உள்ள இந்த டீசரில் “பொறக்கும் போது எல்லாரும் அம்மணமாத்தான பொறக்கனும். ஏன் சில பேர் கோமணத்தோட பிறக்கணும், சில பேர் கோடீஸ்வரான பொறக்கனும்” என பார்த்திபன் பேசும் வசனம் இந்த டீசரில் இடம்பெற்றுள்ளது.