திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வியாழன், 6 செப்டம்பர் 2018 (18:02 IST)

டார்கெட் செய்யும் ஹவுஸ்மேட்கள்! கதறும் மும்தாஜ்...

இந்த வார பிக்பாஸ் எலிமினேசனில் ஐஸ்வர்யா, ஜனனி, மும்தாஜ், சென்ட்ராயன், விஜயலட்சுமி ஆகியோர் உள்ளனர். இதில் எலிமினேசனில் உள்ள போட்டியாளர், தன்னை காப்பாற்றிக் கொள்ள விரும்பினால், அவருக்காக மற்றொருவரை கடினமான வேலைகளை செய்ய வைக்க வேண்டும். குறிப்பாக ஜனனியை காப்பாற்ற பாலாஜி மொட்டை அடிக்க வேண்டி இருந்தது. மொட்டை அடித்தார். யாஷிகா தன்னை காப்பாற்றிக் கொள்ள, கிருத்திகாவிடம் புருவத்தை  பிளிச்சிங் செய்ய சொன்னார்.
இந்நிலையில் இன்றைய ப்ரோமோக்கள் வந்துள்ளன. அதில் மும்தாஜிடம், கிருத்திகா கூறுகையில், நீங்கள் உங்கள் தலைமுடியை எலக்ட்ரிக் கிரீனாக மாற்றி கலரிங் செய்ய வேண்டும் என்கிறார். அதற்கு முடியாது என்று மறுத்த மும்தாஜ், நான் வெளியில் ஒரு சுயநலவாதியாக தெரிந்தாலும், எனக்கு தெரியும்  என்னால் முடியாது என்று கூறினார். 
 
இன்னொரு ப்ரோமோவில், சென்ட்ராயன் பேசுகையில், மும்தாஜை பார்த்து மேடமை பொறுத்தவரைக்கும் சென்ட்ராயனுக்கு ஒன்னுமே தெரியாது என்று  சொன்னங்கா, ஆனால் நானும் காத்துக்கிறேன் என்று மும்தாஜை பார்த்து கூறுகிறார். இதனை கேட்டு கோபமடைந்த மும்தாஜ், நீங்க தப்பா பேசுறீங்க, என்று  கோபப்படுகிறார். அதன் பின்னர் மும்தாஜ் சென்ட்ராயனிடம், நீங்க தப்பா பேசுறீங்க நான் கோபித்துக் கொள்ள கூடாதா என்று கேட்கிறார். அதற்கு சென்ட்ராயன்  மன்னிச்சுடுங்க என்கிறார்.

அதைத்தொடர்ந்து மஹத் பேசுன மாதிரி நீங்களும் பேசிக்கிட்டுஇருங்க, நான் கேட்டுட்டு இருக்கேன்... என்று மும்தாஜ் சொல்கிறார்.  அதற்கு கோபமான சென்ட்ராயன் எதுக்கு, அந்த ஒரு வார்த்தை சொன்ன நாலதான், வெளியிட போய்டான், நானும் வெளிய போகுனனுமா? என்று கேள்வி  எழுப்புகிறார்.